காலா படத்தை தமிழ்ராக்கர்ஸில் டவுன்லோட் செய்வது எப்படி? -கூகுள் தேடலில் முதலிடம்.காலா படம் குறித்த கூகுள் தேடலில் ‘காலா’ படத்தை தமிழ்ராக்கர்ஸில் டவுன்லோட் செய்வது எப்படி? என்ற தேடல் முன்னிலை வகிப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்நிலையில், காலா படம் குறித்து கூகுள் தேடலில் என்ன காட்டுகிறது என்ற சோதித்த போது, அதிர்ச்சியளிக்கும் முடிவுகள் வெளியாகி உள்ளது. உ லக அளவில் காலா தொடர்புடையே தேடல்களில் காலா படத்தின் விமர்சனமும், கபாலி படத்தின் விமர்சனமும் முன்னிலை வகிக்கிற.அதேபோல், இந்திய அளவிலும் காலா தொடர்பாக மக்கள் காலா விமர்சனம், காலா படம் கர்நாடகாவில் வெளியாகுமா?, காலா படம் எப்படியிருக்கு உள்ளிட்ட தேடல்கள் முன்னிலை பெற்றுள்ளன.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் ‘காலா படத்தை தமிழ்ராக்கர்ஸில் டவுன்லோட் செய்வது எப்படி?’ என்ற தேடல் முன்னிலை பெற்றுள்ளது. பலரின் உழைப்பை உள்ளடக்கிய ஒரு கலைப் படைப்பை திரையில் காணாமல், திருட்டுத்தனமாக பார்க்க வேண்டும் என்ற மக்களின் எண்ணம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.