499 ரூபாயில் 5 வருடத்திற்கு இலவச தொலைக்காட்சி

Share:
ஜியோ மூலம் பல சரவெடி அதிரடி சலுகைகளை வழங்கி வந்த ரிலையன்ஸ் தற்போது அட்டகாச அறிவிப்பை வழங்கி மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் குளிக்க வைத்துள்ளது.

செட்டாப் பாக்ஸ்

செல்போன் சேவையை போன்றே செட் ஆப் பாக்ஸ் மூலம் தொலைக்காட்சியை பார்க்க கூடிய சூழல் தற்போது நிலவி வருகிறது..

இதற்கு முன்னதாக, கேபிள் டிவி மூலம் மட்டும் மக்கள் படம் பார்த்து வந்தனர்.

Image result for jio dth\பின்னர் தனியார் நிறுவனங்கள் செட் ஆப் பாக்ஸ் மூலம் செல்போன் சேவை வழங்குவது போன்றே நல்ல தரமான முறையில் பல சேனல்களை பார்க்கும் வசதியை கொடுத்தது.தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் செட்டாப் பாக்ஸ் உடன் தொலைக்காட்சி சேவையை 5 வருடத்துக்கு 500 ரூபாய் மட்டுமே என்ற அதிரடி ஆபர் அறிவித்துள்ளது என்றால் பாருங்களேன்....

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ மூலம் பல அதிரடி சலுகைகளை வழங்கியதில் மற்ற நிருவனங்கள் ஜியோ உடன் போட்டி போட முடியாமல் திணறிவருகிறது

அந்த வரிசையில் ஏர்செல் நிறுவனம் ஜியோ உடனான போட்டியை சமாளிக்க முடியாமல் திவாலானது என்பது குறிப்பிடத்தக்கது

ரிலையன்ஸ் செட்டாப்பாக்ஸ்

அதன்படி, தற்போது ஒரு வருடத்துக்கு ஹெச்டி சேனல்கள் உட்பட மொத்தம் 500 சேனல்களை அடுத்த 1 ஆண்டுக்கு ஃப்ரீ டு ஏர் (எஃப்டிஏ) மூலம் இலவசமாக வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமில்லாமல், அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு வெறும் 500 ரூபாயில் சேவையை வழங்க முடிவு செய்து உள்ளது.


இந்த அற்புத சேவையைபாமர மக்கள் மிகவும் பயனடைவார்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.


இதற்கு முன்னதாக ஜியோ இலவச சேவை வழங்கும் போது அமோக வரவேற்பை பெற்றதற்கு காரணம், முதல் மூன்று மாதம் காலம் முற்றிலும் இலவச சேவை என ஜியோ அறிவித்ததே....

இதே போன்று தற்போது செட் ஆப் பாக்ஸ் விஷயத்தில் ஒரு வருடம் இலவசம் என்று அறிவித்து உள்ளதால், மற்ற நிறுவனங்களின் நிலைமை என்னவாகும் என்பதில் கேள்விகுறி எழுந்துள்ளது.