இனி வரும் காலம் இந்தியாவிற்கு சோதனையான காலமாகவே இருக்கும்

Share:
இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 69.10 குறைந்து வரலாறு காணாத வீழ்ச்சிஇந்தியா தன் பொருட்களுக்கு வரிவிதிப்பதை ஏற்றுகொள்ள முடியாத அமெரிக்கா இப்படித்தான் அடிக்கும்சீனா போல திருப்பி அடிக்க பொருளாதார வலுவோ இல்லை ரஷ்யா, ஈரான் போல எண்ணெய் வளமோ இந்தியாவில் இல்லை

ஒரு மாதிரி சமாளித்து செல்லவேண்டிய விஷயங்கள் இவை, இன்னும் நிர்வாகத்தை சீர்படுத்தாவிட்டால் மகா சிரமம்.டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 70ஐ தாண்டினால் சிவப்பு சமிக்கை, 75ஐ நெருங்கினால் திவால் என அர்த்தம்டாலர் மதிப்பு உயர்ந்தால் இந்தியா இறக்குமதி செய்யும் எல்லா பொருளும் உயரும், எண்ணெய் விலையும் உயரும்.இந்திய பணத்தால் எதையும் வாங்கமுடியா சூழல் உருவாகும்

அப்படி ஆகிவிட்டால் 1998ல் இந்தோனேஷியாவில் கொளுத்தியது போல ரூபாய் நோட்டுக்களை கொளுத்திவிடுவதை தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது

எந்த ஆட்சியிலும் இல்லாத மாபெரும் வீழ்ச்சியினை கொடுத்திருகின்றார்கள், இவ்வளவிற்கும் மாபெரும் உலக‌ சிக்கல் எல்லாம் உருவாகவில்லை எல்லாம் சாதகமாகவே இருந்தன‌

சல்லிவிலையில் எண்ணெய் கொடுக்க அரபு நாடுகள் இருக்க அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்க முடிவெடுத்தது, ஜிஎஸ்டி என வறுத்தெடுத்து தொழில் முடக்கத்தை ஏற்படுத்தியது


மத கலவரம் முதல் ரூபாய் நோட்டுக்கு சிக்கல் என ஒரு திகிலை உண்டு செய்து நாட்டை பரபரப்பிலே வைத்திருந்தது என எல்லாமும் சேர்ந்து நாட்டை வீழ்த்திகொண்டிருக்கின்றது


இனி வரும் காலம் இந்தியாவிற்கு சோதனையான காலமாகவே இருக்கும்.இந்த அரசால் அதை சமாளிக்க முடியுமா என தெரியவில்லை.....