மின்னணு வணிகத்தில் களமிறங்கும், ‘கூகுள்’

Share:
அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, ‘கூகுள்’ நிறுவ­னம், ‘அமே­சான், வால்­மார்ட்’ நிறு­வனங்­களை பின்­பற்றி, இந்­தி­யா­வில் முதன் முத­லாக, மின்­னணு வணி­கத்­தில் கள­மிறங்க உள்­ளது.வலை­தள தேடல் பொறி நிறு­வ­ன­மான கூகுள், இயந்­திர மனி­தன், ஆளில்­லா­மல் பறக்­கும், ‘டிரோன்’, ஓட்­டு­ன­ரின்றி செல்­லும் கார் உள்­ளிட்ட, பல்­வேறு திட்­டங்­களில் முத­லீடு செய்­துள்­ளது. 

ஆனால், வலை­த­ளங்­களில் பொருட்­களை விற்பனை செய்­யும், மின்னணு வணி­கத்­தில் மட்­டும் இறங்க­வில்லை. இந்­நி­லை­யில், இந்­தி­யா­வில், ‘பிளிப்­கார்ட்’ நிறுவனம் மூலம், மின் வணி­கத்­தில் நுழைய முயன்­றது. அதற்­குள், அமெ­ரிக்­கா­வின் வால்­மார்ட் நிறுவனம் முந்­திக் கொண்டு, பிளிப்­கார்ட்­டின், 77 சத­வீத பங்­கு­களை, 1.06 லட்­சம் கோடி ரூபாய்க்கு வாங்­கு­வ­தாக அறி­வித்­தது.
கைவிட்டது : அதன் பின்­ன­ரும், பிளிப்­கார்ட் நிறு­வ­னத்­தில், 13 ஆயி­ரத்து, 400 கோடி ரூபாய் முத­லீடு செய்ய, கூகுள் நிறு­வ­னம் முன்­வந்­தது. ஆனால், பிளிப்­கார்ட் பங்­கு­களை, மிக அதிக மதிப்­பில் வாங்­கி­ய­தாக, வால்­மார்ட் பங்கு முத­லீட்­டா­ளர்­கள் புலம்­பு­வ­தால், முத­லீடு செய்­யும் திட்­டத்தை, கூகுள் கைவிட்­டது. இந்­நி­லை­யில், சில தினங்­க­ளுக்கு முன், சீனா­வின், ஜே.டி., டாட் காம் என்ற மின்­னணு வணிக நிறு­வ­னத்­தில், 55 கோடி டாலர் முத­லீடு செய்­வ­தாக அறி­வித்த கூகுள், இந்­தி­யா­வில் மின்­னணு வணி­கத்­தில் நேரடி­யாக கள­மி­றங்க உள்­ளது.

இது குறித்து, தக­வல் அறிந்த வட்­டா­ரங்­கள் கூறிய­தா­வது: கூகுள் நிறு­வ­னம், சர்­வ­தேச அள­வில் மின்­னணு வணி­கத்­தில் கள­மி­றங்க உள்­ளது. அதற்கு, முதன் முத­லாக, பிர­மாண்ட சந்தை வாய்ப்­புள்ள இந்­தி­யாவை தேர்வு செய்­துள்­ளது. தீபா­வளி நெருக்­கத்­தில், புதிய நிறு­வ­னம் உத­ய­மா­கும் என, தெரி­கிறது.

முன்னேற்பாடு : சில ஆண்­டு­களாகவே, மின்­னணு வணி­கத்­தில் இறங்குவ­தற்­கான முன்­னேற்பா­டு­களை கூகுள் செய்து வந்தது. குறிப்­பாக, விற்­ப­னை­யா­ளர்­களை அடை­யா­ளம் காண, 2,000க்கும் அதிகமான பயிற்­சிப் பட்டறை­களில் இணைந்து செயல்­பட்டது. இதன் விளை­வாக, 15 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட விற்­பனை­யா­ளர்­களை, நிறுவ­னம் அடையாளம் கண்­டுள்­ளது.மேலும், வர்த்­தக அமைப்பு­க­ளின், மின்னணு விற்­பனை திட்­டங்­களில் பங்கு கொண்­டது. அத்துடன், மின்­னணு வர்த்­த­கத்­தில், பணப் பரி­வர்த்­த­னை­ களை சுல­ப­மாக மேற் ­கொள்ள, ‘தேஸ்’ என்ற, ‘ஆப்’பையும் அறி­மு­கப்­படுத்­தி­யது.

வலுவான கட்டமைப்பு : ‘டாடா டிரஸ்ட்’ நிறு­வ­னத்­து­டன் இணைந்து, ‘சாத்தி’ திட்­டத்­தின் கீழ், கிரா­மப்­புற பெண்­க­ளுக்கு இணை­யத்தை பயன்­ப­டுத்­தும் முறை குறித்து பயிற்சி அளித்து வரு­கிறது. இதில், 48 ஆயி­ரம் பெண்­கள் பயன் பெற்­றுள்­ள­னர். இத்­து­டன், 1.80 கோடி, ‘ஜி – மெயில்’ சந்­தா­தா­ரர்­கள் உள்­ளிட்ட வலு­வான கட்­ட­மைப்பு வச­தி­களும் உள்­ளன. அத­னால், மின்­னணு வணி­கத்­தில் கூகுள் இறங்­கி­னால், சுல­ப­மாக வெற்றி பெறும்.இவ்­வாறு அவர்­கள் தெரி­வித்­த­னர்.

போட்டி சுலபம் : இந்­திய மின்­னணு வணி­கத்­தின் சந்தை மதிப்பு, 2.57 லட்­சம் கோடி ரூபா­யாக உள்­ளது. இது, 2020ல், 6 லட்­சம் கோடி ரூபா­யாக உய­ரும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இச்­சந்­தை­யில், அமே­சான், பிளிப்­கார்ட் நிறு­வ­னங்­க­ளின் போட்­டியை, கூகுள் சுல­ப­மாக எதிர்­கொள்ள வாய்ப்பு உள்­ள­தாக, சந்­தை­யா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.