கூகுள் நிறுவனத்திடம் பணம் கறக்கும் கில்லாடி

Share:
கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெறுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் ஒரு ஆஸ்திரேலிய இளைஞர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிலோராட் டுகுல்ஜா என்பவர் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து வருகிறார். அந்த வழக்குகளில் வெற்றி பெற்று நஷ்ட ஈடும் பெற்றுவிடுகிறார். 

2013ஆம் ஆண்டு தனது பெயரையே கூகுளில் தேடிப் பார்த்திருக்கிறார். அப்போது இவரது பெயர் மெல்போர்ன் நிழல் உலக தாதாக்களில் ஒருவராக இடம்பெற்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து மீண்டும் கூகுள் மீது அவதூறு வழக்கு போட்டிருக்கிறார். இந்த வழக்கு விக்டோரியா நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டாது. 

ஆனால், 2017ல் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தார். இதில் தீர்ப்பளித்த ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம் மிலோராட்டின் குற்றச்சாட்டை ஏற்று, கூகுள் நிறுவனத்திடம் நஷ்ட ஈடு பெற அனுமதி வழங்கியுள்ளது.

2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மிலோராட் காயமடைந்துள்ளார். பின், அந்தத் துப்பாக்கிச்சூடு பற்றி கூகுளில் தேடிய அவர் தனது புகைப்படம் துப்பாக்கிச்சூடு நடத்தவர்களில் ஒருவரைப் போல கூகுள் சர்ச் முடிவுகளில் காட்டப்பட்படுவதைப் பார்த்து கூகுள் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வெற்றி பெற்று ரூ.1.37 கோடி (இந்திய மதிப்பில்) இழப்பீடு பெற்றார்.