தீபாவளி ரிலீஸ் - வரிசை கட்டி நிற்கும் அஜித், சூர்யா, விஜய், விக்ரம், விஷால் படங்கள்!

Share:
தீபாவளிக்கு ஏராளமான நடிகர்களின் படங்கள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வரும் நவம்பர் 6ஆம் தேதி, தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. பண்டிகைகள் என்றாலே, பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வரும். வீட்டில் பண்டிகைகளை கொண்டாடிய காலம் போய், திரையரங்களில் கொண்டாடும் காலத்திற்கு வந்துவிட்டோம். 

இந்நிலையில் வரும் தீபாவளிக்கு முக்கிய நடிகர்களின் படங்கள் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அதன் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, அஜித்தின் விஸ்வாசம், சூர்யாவின் என்.ஜி.கே, விஜய்யின் தளபதி62, விக்ரமின் துருவநட்சத்திரம், விஷாலின் சண்டக்கோழி2 ஆகிய படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி62 படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மற்ற படங்களும் தீபாவளி சமயத்தில் வெளிவரும் வகையில், பணிகள் நடைபெற்று வருகின்றன.

No comments