‘மெர்சல்’ படைத்த மற்றுமொரு புதிய சாதனை!

Share:
விஜய்யின் ‘மெர்சல்’ படம் இந்தியளவில் மற்றுமொரு புதிய சாதனையை படைத்துள்ளது. 

நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான படம் ‘மெர்சல்’. இந்தப் படம் கடந்த வருடம் தீபாவளி விருந்தாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் டீசர், டிரைலர் உலக அளவில் சாதனை செய்தது. அதேபோல் வசூலிலும் ரூ.200 கோடியை தாண்டியது. 

இந்த படம் துவங்கியது முதலே ‘மெர்சல்’ படததுக்கான டுவிட்டர் எமோஜி தொடங்கப்பட்டது. ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட டீசர்களில் ‘மெர்சல்’ டீசர் முதல் இடத்தை பிடித்தது. மேலும், 24 மணி நேரத்தில் ‘மெர்சல்’ டீசர் 11.21 மில்லியன் பார்வையாளர்களை தொட்டு சாதனை படைத்தது. இது போன்ற பல சாதனைகளை இப்படம் படைத்தது. 


இந்நிலையில், இப்படம் ஒரு புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அது என்னவென்றால் கடந்த ஆண்டு டுவிட்டரில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகளில் ‘மெர்சல்’ முதல் இடத்தை பிடித்துள்ளது.