தேவை இல்லாமல் உடலில் சேரும் கொழுப்பு குறைய என்ன செய்யலாம்?

Share:

குழந்தைகளுக்கு சிறந்த உணவுத் தாய்பால், சீரகத்தைப் பொடி செய்து சிறிது சர்க்கரை சேர்த்து பாலில் கலந்து குடிக்க பால் பெருகும். குழந்தைகளுக்குப் போதிய தாய்ப்பால் கிடைக்கும். மேலும் குழந்தைகளுக்கு பால் விரைவில் சீரணமாகும். அரிசிக் கஞ்சியில் வெந்தயத்தை பொடி செய்து சேர்த்துக் குடித்துவர தாய்ப்பால் கிடைக்கும்.
பத்து கிராம் உரித்த பூண்டை பாலில் வேகவைத்துக் கடைந்து சாப்பிட வாயு, செரியாமை, சளி ஆகியவை தீரும். குடல் புழுக்கள் வெளியேறும்.
ஓமத்தை வறுத்து, பொடித்து ஒரு கிராம் வீதம் நீருடன் உட்கொள்ள வாயுத்தொல்லை விலகும்.
சாப்பிட்ட பிறகு சிறிதளவு சோம்பினை வாயிலிட்டு மென்று தின்ன அசீரணம், மலச்சிக்கல், வாந்தி போன்றவைகளின் தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.
முட்டைகோஸ் சூப் அல்லது முட்டைக்கோஸ் இடித்து பிழிந்த சாறு தினம் காலையில் இரண்டு அவுன்ஸ் குடித்துவர குடற்புண் குணமாகும்.
வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, படை போன்றவை குணமாகும்.
பேரீச்சம் பழங்களைத் தினமும் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ந்து நரம்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கின்றது.
புதினா இலையை அடிக்கடி உணவில் உபயோகப்படுத்தி வருவதால் தேவை இல்லாமல் உடலில் சேரும் கொழுப்பு குறையும்.
பசும்பாலை கறந்த சூட்டுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து மூன்று நாள் விடியற்காலையில் சாப்பிட சளி, கபம் இல்லாத வறட்டு இருமல் தீரும்.
குழந்தை பிறப்பதற்கு முன்னும் பிறந்த பின்னும் தாய்மார்கள் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும், குழந்தையும் நன்கு வளரும்.
கருவுற்ற தாய்மார்கள் வல்லாரைக் கீரை, தூதுவளைக் கீரை போன்றவற்றை சாப்பிடுவதால் ஆரோக்கியமும், புத்திசாலித்தனமும் உள்ள குழந்தையைப் பெறுவார்கள்.