மத்திய அரசை கவிழ்க்க காங்கிரசுடன் கைகோர்த்த பாஜக அணி!

Share:
காங்கிரஸ் கட்சி தொடர்புடைய பல்வேறு ஊழல் வழக்குகளில் இணைந்து பாஜகவில் சிலரும், மத்திய அரசில் சிலரும் காங்கிரஸ்க்கு ஆதரவாக செயல்படுவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறையில் இணை இயக்குநராக இருப்பவர் ராஜேஸ்வர் சிங். இவர் 2ஜி முறைகேடு வழக்கு மற்றும் ஏர்செல் - மேக்சிஸ் விவகாரங்களை விசாரித்து வந்தவர். இந்நிலையில், ராஜேஸ்வர் சிங் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகவும், அவரைப் பணியிலிருந்து விடுவித்து விசாரிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ராஜ்னேஷ் கபூர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எஸ்.கே கவுல் அமர்வு. ‘மிக முக்கியமான வழக்குகளை விசாரித்த ராஜேஸ்வர் சிங்க்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் அதனால் எவ்விதமான விசாரணைக்கும் தயாராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்கள்.

மேலும் ராஜேஸ்வர் சிங் மீதான குற்றச்சாட்டுகளை அரசு விசாரிக்க வேண்டும். 2ஜி மற்றும் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை விசாரிக்கும் குழுவில் இருந்து ராஜேஸ்வரை விடுவிப்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இது குறித்து டெல்லியில் நிருபர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, 
காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஊழல் வழக்குகளான நேஷனல் ஹெரால்டு, ஏர்செல் மேக்சிஸ் வழக்குகள் கமுக்கமாக மூடப்பட்டன. இதற்கு காரணம் பாஜ கட்சிக்குள்ளும், மத்திய அரசிலும் சிலர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட்டதே காரணம் என கூறியுள்ளார், 

மேலும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் சதி நடப்பதாகவும், அவரின் மரியாதையை, நன்மதிப்பைத் தேர்தலுக்குள் சீர்குலைக்கும் எண்ணத்தில் 4 பேர் கொண்ட குழு ஆட்சியைக் கவிழ்க்க முயல்கிறார்கள். அந்தச் சதி குறித்து நான் மும்பையில் ஜூலை 8-ம் தேதி பகிரங்கமாக அறிவிப்பேன் எனவும் அதிரவிட்டுள்ளார்.