இனி யாராலும் தடுக்க முடியாது.. கரைபுரண்டு வரும் காவிரி... தமிழகத்துக்கு தண்ணீர் விடவில்லையென்றால் கர்நாடகம் அழிவின் விளிம்பில்..??

Share:
தென் மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கர்நாடகா, கேரளா கடலோர பகுதிகளில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிட்டால் இவ்வாண்டு இந்தியாவில் பருவமழை சிறப்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் கடந்த ஆண்டை ஒப்பிட்டால் 96 முதல் 104 சதவீத மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவிலும், கேரளாவிலும் பெய்யும் கன மழை காரணமாக, பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த மழையால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அசாம், மேகாலயா, உத்தரகாண்ட் மாநிலத்தின் சில பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கர்நாடகத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்குள்ள அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீரை அப்படியே கர்நாடகம் திறந்து விட்டு வருகிறது.

கபினி அணையில் தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் ஓரிரு நாட்களில் தமிழக எல்லையை சென்றடையும் என்பதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப் புள்ளது.

குடிநீர்த் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து500 கனஅடி நீர் மட்டுமே தற்போது திறந்து விடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.