காவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர் நிறுத்தம்

Share:
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் உள்ளிட்ட பல பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் கபினி அணை, முழு கொள்ளளவான 84 அடியை எட்டியது.

அணையில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 35,000 கனஅடி வரை அதிகரிக்கப்பட்டது. அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்ததை அடுத்து 6667 கனஅடி உபரி நீர் மட்டும் திறக்கப்பட்டு வந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்தது.

இந்நிலையில் கர்நாடகாவில் மழை ஓய்ந்து, கபினி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. அணையின் நீர்மட்டம் 81 அடியாக உள்ளது. இருப்பினும் இன்று காலை முதல் கபினி அணையில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு உபரி நீர் திறந்து விடப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கர்நாடகாவின் தேவைக்காக மட்டும் அணையில் இருந்து விநாடிக்கு 250 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.