போலியான புகைப்படத்தையோ, மாற்றியோ பதிவேற்றினால் மட்டிகொள்வீர்கள்!

Share:
தற்போது புகைப்படங்களில் தங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதன் மூலம் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க புதிய தொழில்நுட்பத்தை அப்டேட் செய்துள்ளது போட்டோஷாப் நிறுவனம். 

தற்போதுள்ள தொழில்நுடபத்தை பயன்படுத்தி பல நல்ல விஷயங்கள், பயன்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், அதே தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு சமூக பிரச்னைகளும் ஏற்பட்டு வருகின்றன. 

ஒரு புகைப்பட கலைஞர் தான் எடுத்த உண்மையான படத்தை, போட்டோஷாப் மூலம் மாற்றம் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பபடுகின்றன. அப்படி செய்கையில் அது சமூகத்தை திருத்தும் வகையில் இருந்தால் பரவாயில்லை. ஆனால் சிலர் சமூகபிரச்னைகளை கொண்டு வர நினைப்பவர்கள், தங்களுக்கு இஷ்டம் போல போட்டோஷாப் மூலம் உண்மையான படத்தை மாற்றி பதிவேற்றும் போது பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. 

பொய் புகைப்படத்தை கண்டறிவது எப்படி?
இந்நிலையில் போட்டோஷாப் நிறுவனம் கொடுத்துள்ள அப்டேட்டில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 
இதன் மூலம் போலியாக போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை எளிதாக கண்டறிய முடியும் என கூறப்பட்டுள்ளது. இதனால் முக்கியமாக சமூக பிரச்னைகளை ஏற்படுத்தும் புகைப்படங்கள் உண்மை தானா என எளிதில் கண்டறியமுடியும். இந்த பொய்யான படங்களை வைத்து உருவாகும் பொய்யான செய்திகளும் தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.