யாஹூ மெசேஞ்சருக்கு மூடுவிழா!

Share:
யாஹூ மெசேஞ்சர் சேவையை நிறுத்தப்போவதாக ஒத் இன்க் நிறுவனம் அறிவித்துள்ளது.

யாஹூ மெசேஞ்சர் என்றாலே இந்தக் கால தலைமுறையினர் சிலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. காரணம் நாளுக்கு நாள் மேம்படும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாகப் புதிய புதிய மெசேஞ்சர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர், ஹேங் அவுட் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு செயலிகள் காளான்போல் முளைத்துள்ளன. இதனால் பழைய செயலிகள் இருப்பதே பலருக்குத் தெரியாமல் போய்விட்டது.

காலப்போக்கில் மறக்கடிக்கப்பட்டுவிட்டது. இப்படியான போட்டி சூழ் உலகில் தன்னை புதுபித்துக்கொள்ளாத எந்தவொரு செயலியும் நீடிக்க வாய்ப்பில்லை. அந்தவகையில் கடந்த 1998-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி யாஹூ பேஜர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்தச் செயலி காலப்போக்கில் யாஹூ மெசேஞ்சராக உருவெடுத்தது. இந்தச் சேவை அடுத்த மாதம் 17-ம் தேதி நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாற்றாக யாஹூ நிறுவனம் ஸ்கூரில் எனும் மெசேஜிங் செயலியைச் சோதனை செய்தது. இந்தச் செயலி யாஹூ மெசேஞ்சருக்கு மாற்றாக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் சாட் ஹிஸ்ட்ரியை அடுத்த ஆறுமாதங்களுக்கு டவுன்லோட் செய்ய முடியும் என யாஹூ அறிவித்துள்ளது.

No comments