ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே டெஸ்ட்டில் பல சாதனைகள் செய்த இந்தியா!

Share:
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நம்பர் 1 இந்தியா பல சாதனைகளைப் படைத்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி அங்கிகாரம் அளித்த நிலையில், டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 அணியான இந்தியாவுடன் அதன் அறிமுகப் போட்டியில் விளையாடியது. இதில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தியா செய்த பல சாதனைகள்:


குறைந்த பந்துகள் வீசி வெற்றி பெற்ற இந்தியா :

399 v ஆப்கானிஸ்தான், பெங்களூரு, 2018*
554 v ஆஸ்திரேலியா, மும்பை, 2004 
569 v வங்கதேசம், தாக்கா, 2007 
596 v ஜிம்பாப்வே, ஹராரேe, 2005 

குறைந்த ரன்: 
இந்தியாவுக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து குறைவாக ரன் எடுத்த அணி விபரம் 
212 ஆப்கானிஸ்தான், பெங்களூரு, 2018* 
230 இங்கிலாந்து, லீட்ஸ், 1986 
241 நியூசிலாந்து, ஆக்லாந்து, 1968 
242 இங்கிலாந்து, லாட்ஸ், 1936 
254 நியூசிலாந்து, ஹாமில்டன், 2002 

ஒரே நாளில் அதிக வீக்கெட் வீழ்ந்த அதிசயம்:27 இங்கிலாந்து v ஆஸ்திரேலியா, லாட்ஸ், 1888 (Day 2) 
25 ஆஸ்திரேலியா v இங்கிலாந்து, மெல்போர்ன், 1902 (Day 1) 
24 இங்கிலாந்து v ஆஸ்திரேலியா, ஓவல், 1896 (Day 2) 
24 இந்தியா v ஆப்கானிஸ்தான், பெங்களூரு, 2018 (Day 2)* 

குறைந்த ஓவரில் எதிரணியை கட்டுப்படுத்திய அணி விபரம்:

27.5 ஆப்கானிஸ்தான் v இந்தியா, பெங்களூரு, 2018 
38.4 ஆப்கானிஸ்தான் v இந்தியா, பெங்களூரு, 2018 + 
46.3 வங்கதேசம் v இந்தியா, தாக்கா, 2000 + 
47.1 நியூசிலாந்து v இங்கிலாந்து, கிறிஸ்ட்சர்ச், 1930 
47.2 அயர்லாந்து v பாகிஸ்தான், மலஹாய்ட், 2018 
இரண்டாவது இன்னிங்ஸில் என்பதற்காக + குறியிடு 

மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த இந்தியா 

இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் v ஆப்கானிஸ்தான், பெங்களூரு, 2018* 
இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் v வங்கதேசம் , மிர்பூர், 2007 
இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் v இலங்கை, நாக்பூர், 2017 
இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் v ஆஸ்திரேலியா, கொல்கத்தா, 1998