ஆட்சி கவிழும் அபாயத்தில் இருந்து எடப்பாடி அரசு தி கிரேட் எஸ்கேப்

Share:
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு கவிழும் அபாயத்தில் இருந்து தப்பிவிட்டது.

தமிழக சட்டசபையில் மொத்தம் 234 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதனடிப்படையில் ஆட்சி நீடிக்க தேவையான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 118.
தகுதி நீக்க வழக்குக்கு முன் சட்டசபை பலம்:

அதிமுக- 134
எதிர்க்கட்சிகள்- 98 (திமுக - 89; காங்கிரஸ்- 8; இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1)

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்துக்குப் பின் சட்டசபை பலம்:

மொத்தம் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை: 216


பெரும்பான்மைக்கு தேவை 109 எம்.எல்.ஏக்கள்

அதிமுக- 110 (சபாநாயகரை சேர்த்தால் 111)

எதிர்க்கட்சிகள்- 98 (திமுக - 89; காங்கிரஸ்- 8; இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-1)

சுயேட்சை (தினகரன்)- 1

அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள்- 3

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் - 3 (பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி)

தற்போதைய நிலையில் எடப்பாடி அரசு பெரும்பான்மையுடன் இருக்கிறது.

இந்த நிலையில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதனால் 3-வது நீதிபதியின் தீர்ப்புக்கு காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என நீதிபதிகள் ஒருசேர தீர்ப்பளித்திருந்தால் எடப்பாடி அரசு கவிழும் நிலை இருந்தது.


அதாவது தகுதி நீக்கம் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தால் சட்டசபை பலம்:

மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை: 234

பெரும்பான்மையை நிரூபிக்க தேவை- 118

அதிமுக- 110 (சபாநாயகரை சேர்த்தால் 111)

திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக்- 98

சுயேட்சை (தினகரன்)- 1

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்- 21

அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள் (அன்சாரி, தனியரசு, கருணாஸ்)- 3


என்கிற நிலைதான் இருந்திருக்கும். இதனால் எடப்பாடி அரசால் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்களை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழும் நிலை உருவாகி இருக்கும். ஆனால் தற்போது எடப்பாடி அரசு கவிழும் அபாயத்தில் இருந்து தப்பிவிட்டது.