தொழில் செய்து நல்ல வருமானம் பார்த்தவன் மீண்டும் தொழில் செய்கிறான் #பிக்பாஸ் 2

Share:
வௌிநாடுகளிலும், வட இந்திய சேனல்களிலும் பிரபலமாக இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, கடந்தாண்டு தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் களமிறங்கியது. 

தமிழில் விஜய் டிவியில் ஔிப்பரப்பான இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது கூடுதல் சிறப்பு. 

Image result for oviyaகடந்த #BIGGBOSS 1 சீசனில் ஓவிய - ஆரவ் காதல், ஓவியா தற்கொலை சம்பவம், சினேகனின் கட்டிப்பிடி வைத்தியம், காயத்திரி ரகுராமின் கெட்டவார்த்தை, ஜூலியின் பொய்யான நாடகம் என நிகழ்ச்சி களை கட்டியது. முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் இப்போது பிரபலமாகி உள்ளனர். அந்தவகையில் இதன் இரண்டாவது சீசன் பற்றிய அறிவிப்பு வௌியானவுடன் இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இரண்டாவது சீசனையும் கமல் தொகுத்து வழங்குகிறார்.

பிக்பாஸ் 2 (ஜூன் 17) முதல் ஆரம்பமானது. இந்த சீசனில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த சீசனில் பாதியில் வௌியேறிய ஓவியா, இந்த முறையும் உள்ளே சென்றுள்ளார்.

போட்டியாளர்களின் விபரம்...

01. யாஷிகா ஆனந்த் - சமீபத்தில் வௌிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

02. பொன்னம்பலம் - பிரபல வில்லன் நடிகர் இவர்

03. மகத் - மங்காத்தா, ஜில்லா படங்களில் நடித்து பிரபலமானவர்.

04. டேனியல் - இதற்கு தானே ஆசைப்பட்டாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர்
05. வைஷ்ணவி - பிரபல ரேடியோ ஜாக்கி இவர்.

06. ஜனனி ஐயர் - அவன் இவன், தெகிடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இவர்.

07. அனந்த் வைத்தியநாதன் - விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பாடல் எடுக்கும் குருவாகவும், அவன் இவன் படத்திலும் நடித்திருக்கிறார்.

08. ரம்யா - பின்னணி பாடகியாக உள்ளார். இவர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தியாவார்

09. சென்ட்ராயன் - பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

10. ரித்திவிகா - மெட்ராஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்

11. மும்தாஜ் - குஷி உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர்.

12. தாடி பாலாஜி - சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் ஜொலித்த நடிகர்.

13. மமதி சாரி - பிரபல ரேடியோ ஜாக்கியான இவர் சின்னத்திரையிலும் கலக்கியிருக்கிறார்.

14. நித்யா - இவர் இதே சீசனில் கலந்து கொண்டுள்ள நடிகர் தாடி பாலாஜியின் மனைவி ஆவார்.

15. சாரிக் ஹாசன் - நடிகை கமலா காமேஷின் பேரனும், நட்சத்திர தம்பதியரான ரியாஸ் - உமாவின் மகன் ஆவார்.

16. ஐஸ்வர்யா தத்தா - நடிகையான இவர், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்தவர்

17. ஓவியா - கடந்த சீசனில் அனைவரின் கவனத்தை ஈர்த்து, பாதியில் வௌியேறிய ஓவியா, இந்த சீசனிலும் களமிறங்கி உள்ளார்.

No comments