ஆதார் எண் இல்லாவிட்டால் என்ன செய்வது?

Share:
ஆதார் எண்ணுக்கு மாற்றாக வெர்சுவல் ஐடியை பயன்படுத்தலாம் என்று மத்திய தொலைத்தொடர்ப்புத் துறை அறிவித்துள்ளது. 

புதிய சிம் கார்டுகள் வாங்குவது மற்றும் பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்ணை உறுதிசெய்வது போன்ற தேவைகளுக்கு அடையாளச் சான்றாக ஆதார் எண் கட்டயாமாக உள்ளது. 

இதற்கு மாற்றாக வெர்சுவல் ஐடி என்ற புதிய அடையாள எண்ணை மத்திய தொலைத்தொடர்புத்துறை அறிமுகம் செய்ய உள்ளது. ஆதார் ஆணையத்தின் இணையதளத்தின் மூலம் உருவாக்கப்படும் 16 இலக்க எண் வெர்சுவல் ஐடி எனப்படுகிறது. இதனை ஆதார் எண்ணுக்குப் பதிலாக பயன்படுத்தலாம். 


தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஆதார் எண் தேவைப்படும் இடங்களில் இந்த எண்ணை ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன. வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த வெர்சுவல் ஐடி வசதி ஆதார் ஆணைய இணையதளத்தில் கிடைக்கும்.
இதனை இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பும் (COAI) வரவேற்றுள்ளது. இந்த வெர்சுவல் ஐடி பயன்பாடு ஆதார் தகவல்களை மேலும் பாதுகாப்பானதாக ஆக்கும் என்று தொலைத்தொடர்புத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.