டெஸ்ட் உலகக் கோப்பை: இந்திய அணி பங்குபெறும் போட்டிகளின் விவரம்!

Share:
டெஸ்ட் உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

9 அணிகள் பங்குபெறும் இந்தப் போட்டி 2019 ஜூலை 15 முதல் 2021 ஏப்ரல் 30 வரை நடைபெறவுள்ளது. 

இந்த இரண்டு வருடக் காலகட்டத்தில் 9 அணிகள் தலா ஆறு டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கும். முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள், 2021 ஜூனில் லார்ட்ஸில் நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் பங்குபெறும்.

2019 உலகக் கோப்பைப் போட்டி முடிவடைந்தவுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனப்படும் டெஸ்ட் உலகக் கோப்பைப் போட்டி தொடங்கும். முதல் போட்டியாக இங்கிலாந்தில் ஆஷஸ் தொடர் நடைபெறவுள்ளது. அதே ஜூலை மாதத்தில் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர்கள் நடைபெறவுள்ளன. கடைசி லீக் போட்டி ஏப்ரல் 2021-ல் நிறைவுபெறுகிறது. அதில் இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் பங்கேற்கின்றன.


டெஸ்ட் உலகக் கோப்பை உள்ளிட்ட 2018 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்தியா பங்கேற்கும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களின் விவரங்கள்:

(டெஸ்ட் தொடர்கள் தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இதர தொடர்கள் - ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள்)

2018-19

உள்ளூர்: ஆப்கானிஸ்தான், மே.இ. (டெஸ்ட் தொடர்கள்), ஆஸ்திரேலியா. 

வெளிநாடு: இங்கிலாந்து (டெஸ்ட் தொடர்), அயர்லாந்து.

2019-20

உள்ளூர்: தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே (டெஸ்ட் தொடர்கள்), மே.இ., ஆஸ்திரேலியா.

வெளிநாடு: ஆஸ்திரேலியா, மே.இ., நியூஸிலாந்து (டெஸ்ட் தொடர்கள்).

2020-21

உள்ளூர்: இங்கிலாந்து (டெஸ்ட் தொடர்), ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான். வெளிநாடு: ஆஸ்திரேலியா (டெஸ்ட் தொடர்), இலங்கை, ஜிம்பாப்வே

2021-22

உள்ளூர்: நியூஸிலாந்து, இலங்கை (டெஸ்ட் தொடர்கள்), தென் ஆப்பிரிக்கா, மே.இ.

வெளிநாடு: இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா (டெஸ்ட் தொடர்கள்), இலங்கை, நியூஸிலாந்து.


2022-23

உள்ளூர்: ஆஸ்திரேலியா (டெஸ்ட் தொடர்), இலங்கை, இங்கிலாந்து, நியூஸிலாந்து.

வெளிநாடு: வங்கதேசம் (டெஸ்ட் தொடர்), இங்கிலாந்து, மே.இ.

No comments