தகுதி நீக்கம் செய்யப்பட்டவா்களில் 17 போ் சா்ாபில் உச்சநீதிமன்றத்தில் மனு

Share:
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினா்களில் 17 போ் சாா்பில் தகுதி நீக்க வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யக்கோாி மனுத்தாக்கல் செய்துள்ளனா். 

முதல்வா் பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் மனு வழங்கிய அ.தி.மு.க.வைச் சோ்ந்த் 18 சட்டமன்ற உறுப்பினா்களை சபாநாயகா் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டாா். இதற்கு எதிா்ப்பு தொிவித்து சென்னை உயா்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சமீபத்தில் தீா்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமா்வு வழங்கிய தீா்ப்பில் மாறுபட்ட தீா்ப்பு வழங்கப்பட்டது. 

இதனைத் தொடா்ந்து இந்த வழக்கை 3வது நீதிபதிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. 3வது நீதிபதியாக விமலா நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினா்களில் 17 போ் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், சென்னை உயா்நீதிமன்றத்தில் இந்த வழக்கு மேலும் விசாரிக்கப்பட்டால் உாிய நீதி கிடைக்காது என்பதால் வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த வழக்கில் நான் மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்று தொிவித்திருந்த தங்த்தமிழ்ச் செல்வன் மேல்முறையீடு செய்யவில்லை என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

Keywordsஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு | ttv dhinakaran | tamil nadu | Supreme Court |MLAs disqualification case | 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு | 18 MLAs Case