ஜியோ ரீசார்ஜ்க்கு 1.5 ஜிபி கூடுதல் டேட்டா

Share:

தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்த ஆஃபருக்கு ஈடு கொடுக்கும் வகையில், ஜியோ நிறுவனம் அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளது. 
ஏர்டெல் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன், குறிப்பிட்ட ஏர்டெல் எண்களின் 149 ரூபாய் மற்றும் 399 ரூபாய் ரீசார்ஜ்களுக்கு கூடுதல் 1 ஜிபி டேட்டாவை அளிப்பதாக புதிய ஆஃபர் ஒன்றை அறிவித்தது. 

தற்போது, ஜியோ நிறுவனம் இந்த ஆஃபருக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில் புதிய ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 12 ஆம் தேதி 4 மணி முதல், ஜூன் 30 ஆம் தேதி வரை இடைப்பட்ட நாட்களில் ஜியோ எண்ணில் செய்யப்படும் ரீசார்ஜ்க்கு 1.5 ஜிபி கூடுதல் டேட்டாவை அறிவித்துள்ளது. 

வெறும் 299 ரூபாய்க்கு தினமும் 3ஜிபி டேட்டா- இது தான் ஜியோவின் அடுத்த அதிரடி!!
அதாவது, நீங்கள் 399 ரூபாய்க்கு 1.5 ஜிபி வீதம் 84 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்திருந்தால், உங்களுக்கு தினமும் 1.5 ஜிபிக்கு பதிலாக, 3 ஜிபி டேட்டா கிடைக்கும்.

இதுதவிர, 300 ரூபாய்க்கு மேல் நீங்கள் செய்யும் ரீசார்ஜ்க்கு 100 ரூபாய் கேஷ்பேக் ஆஃபரையும் ஜியோ அறிவித்துள்ளது. இதனால், நீங்கள் 399 ரூபாய் பிளானை 299 ரூபாய்க்கு வாங்கலாம். அதேபோல், 300 ரூபாய்க்கு கீழ் உள்ள பிளான்களுக்கு, விலையில் 20% தள்ளுபடியையும் ஜியோ அறிவித்துள்ளது. ஏர்டெல் - ஜியோ பிளான்களின் ஒப்பீடு