ஏர்டெல் ரூ.99/-ல் அதிரடி திருத்தம்.. இனி கூடுதல் நன்மைகள்.!

Share:
ரிலையன்ஸ் ஜியோவின் டபுள் டமாக்கா (கூடுதலாக 1.5ஜிபி டேட்டா வழங்கும்) வாய்ப்பை எதிர்கொள்ளும் முனைப்பின் கீழ் பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் ரூ.99/- திட்டத்தில் அதிரடி திருத்தத்தை அறிவித்துள்ளது. இந்த திருத்தத்தின் விளைவாக ஜியோவின் ரூ.98/- திட்டத்துடன் ஏர்டெல் கடுமையாக போட்டியிட முடியும்.

ஜியோவின் ரூ,98/- தான் இன்றுவரை சிறந்த நுழைவு நிலை கட்டண திட்டங்களில் ஒன்றாக உள்ளது. அதை தகர்க்கும் வண்ணம் ஏர்டெல் ரூ.99/-ல் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக 1ஜிபி டேட்டா வழங்கிய ரூ.98/- ஆனது இனி 2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். உடன் வழக்கமான வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளும் அணுக கிடைக்கும். இந்த திட்டத்தின் சிறந்த பகுதியாக இதன் செல்லுபடி திகழ்கிறது. இது ரீசார்ஜ் செய்த தேதியில் இருந்து 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த நன்மைகள் ஜியோவின் ரூ.98/- திட்டத்துடன் ஒத்திருக்கிறது. அது வரம்பற்ற குரல் அழைப்புகள், 2 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா மற்றும் மொத்தமாகவே 300 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை 28 நாட்களுக்கு வழங்கும். 

இன்னும் சொல்லப்போனால் ஏர்டெல் இந்த திருத்தத்துடன் ஜியோவை வெற்றிகொள்ள முடிந்தது. முகேஷ் அம்பானி சொந்தமான டெலிகாம் நிறுவனத்தின் ரூ.98/- ஆனது, மொத்த செல்லுபடியாகும் காலத்திற்கும் 300 எஸ்எம்எஸ் மட்டுமே வழங்குகிறது. அதே நேரத்தில் ஏர்டெல் நிறுவனம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கொடுக்கிறது, ஆக மொத்தம் 2800 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மற்றபடி குரல் அழைப்பு மற்றும் தரவு நன்மைகளில் சரிக்கு சமமாக மோதிக்கொள்கின்றன. 

ஜியோவின் டபுள் டமாக்கா வாய்ப்பை பொறுத்தவரை, நாள் ஒன்றிற்கு 2ஜிபி டேட்டா வழங்கி வரும் ரூ.299/- ஆனது ஜியோவின் டபுள் டமாக்காவின் கீழ் ரீசார்ஜ் செய்ய, கூடுதலாக 1.5ஜிபி என நாள் ஒன்றிற்கு 4.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். தவிர ரீசார்ஜ் செய்யும் தொகையில் 20 சதவீத தள்ளுபடி பெற்று, இறுதி விலையானது ரூ.239/- என்றாகும். மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும் 

இந்த திட்டத்தின் கீழ் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியநன்மைகளும் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் 4.5ஜிபி பெற, ஜூன் 12 - ஜூன் 30 க்கு இடையில் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டங்களாக ரூ.149, ரூ.349, ரூ.399, மற்றும் ரூ.449/- ஆகியவைகள் ஜியோ வரிசையில் உள்ளன. 

நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி வழங்கும் ரூ.149 பேக் ஆனது புதிய டபுள் டமாக்கா வாய்ப்பின் கீழ் கூடுதலாக 1.5ஜிபி வழங்கி மொத்தம் 3ஜிபி அளவிலான டேட்டாவை தினமும் வழங்கும். இதற்கும் 20% தள்ளுபடி உண்டு என்பதால், இதன் இறுதி விலை ரூ.120/- என்றாகும். இந்த திட்டத்தின் கீழ் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளும் கிடைக்கும். 

மறுகையில் உள்ள ரூ.300/-க்கு மேற்பட்ட திட்டங்களில் (ஜியோ டபுள் டமாக்கா வாய்ப்பின் விதிகளின் படி) ஒவ்வொரு ரீசார்ஜ் கட்டணத்திற்கும் ரூ.100/- தள்ளுபடி கிடைக்கும். மைஜியோ பயன்பாட்டைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்யும் போது, ரூ.50 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படும். இந்த தள்ளுபடி பணமானது வாடிக்கையாளரின் PhonePe கணக்கில் சேர்க்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, 84 நாட்களுக்கும் தினசரி 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் ஜியோ ரூ.399/- ப்ரீபெய்ட் பேக் ஆனது இப்போது ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குவதோடு சேர்த்து ரூ.299/-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.

No comments