கவர்னரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை

Share:
மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்ய கவர்னருக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக கவர்னர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளுக்கு செல்லும் கவர்னர், பல திட்டங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.

கவர்னர், தமிழகம், ஆய்வுஇந்நிலையில், இது தொடர்பாக கவர்னர் மாளிகை அளித்த விளக்கம்: மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்த கவர்னருக்கு உரிமை உள்ளது. தமிழக அரசின் எந்த துறையையும் கவர்னர் இதுவரை விமர்சனம் செய்தது கிடையாது. மக்கள் நலனுக்காக இது போன்ற ஆய்வு தொடரும். 
கவர்னரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க சட்டத்தில் இடம் உள்ளது. அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும், மாநில அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் கடமையும் கவர்னருக்கு உள்ளது. இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.