விஜய் விருதுகள் 2018: விஜய் அவார்ட்ஸில் விருதுகளை அள்ளிய விஜய்யின் ‘மெர்சல்’

Share:
விஜய் டிவி வழங்கும் விஜய் அவார்ட்ஸ் விருது நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படம் 3 விருதுகளை அள்ளியுள்ளது. 

ஓவ்வொரு ஆண்டும் வெளியாகும் தமிழ் படங்களில், சிறந்த படங்கள், இயக்குநர், நடிகர், என சிறந்த சினிமா கலைஞர்களைத் தேர்வு செய்து விஜய் டிவி ‘விஜய் அவார்ட்ஸ்’ விருது வழங்கி வருகிறது. அந்த வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு மே மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. 

ஆனால், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக, விருது வழங்கும் விழாவை அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தள்ளிவைத்தது. இதையடுத்து, விருது வழங்கும் விழா ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் என அந்த தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்தது. 
இந்நிலையில், நேற்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், நடிகர் விஜய்சேதுபதி விக்ரம் வேதா படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். நடிகை நயன்தாரா சிறந்த நடிகை மற்றும் பிடித்தமான நடிகை ஆகிய இரண்டு விருதுகளைப் பெற்றார்.இதில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம், சிறந்த படம், சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த பாடல் ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகளை அள்ளியது. இந்நிகழ்ச்சியில், பிடித்தமான ஹீரோ பிரிவில் விருது வழங்கப்படாததால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.