இளம் பெண்ணை விரட்டி விரட்டி முத்தம் கொடுக்கும்..! கல்லூரி நிர்வாக இயக்குனர்...!!

கோவையில் உள்ள எஸ்என்எஸ் கல்லூரியின் நிர்வாக இயக்குநராக உள்ளவர் சுப்பிரமணியன் (64). இவர் 23 வயது இளம் பெண் ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இந்நிலையில் அவருக்கு தெரியாமல் அந்த பெண்ணே ரகசியமாக கேமராவை வைத்து அந்த வீடியோ ஆதாரத்துடன் சுப்பிரமணியன் மீது துடியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த பெண்ணை ஓடி பிடித்து சுப்பிரமணி சில்மிஷம் செய்யும் வீடியோ வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஏற்கெனவே திருவண்ணாமலையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுபோல் அருப்புக்கோட்டையில் பேராசிரியை நிர்மலா தேவியும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் இலவச இன்கம்மிங் கிடையாது

வருவாய் இழப்பை தொடர்ந்து நெட்வொர்க் நிறுவனங்கள் அதிரடி...பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் இலவச இன்கம்மிங் கிடையாது..

இனிமேல் ரீசார்ஜ் செய்யாமல் வெறுமனே இன்கம்மிங் கால்களை பெற முடியாது.

அன்லிமிடெட் பேக் இல்லாத

வாடிக்கையாளர்கள் மாதம் குறைந்தபட்சம் ரூ.25க்கு ரீசார்ஜ் செய்தால் மட்டுமே அவுட்கோயிங் கால்களை மேற்கொள்ள இயலும்.

அதுவும் 28 நாட்கள் மட்டுமே.


28 நாட்களுக்கு பின் அவுட்கோயிங் வசதி துண்டிக்கப்படும்.

Image result for vodafone airtel ideaமீண்டும் அவுட்கோயிங் வசதியை பெற குறைந்த பட்சம் ரூ.25 முதல் அதிக பட்சம் ரூ.495 வரை உள்ள ரீசார்ஜ்களில் ஏதாவது ஒன்றை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
அவ்வாறு ரீசார்ஜ் செய்யாதபட்சத்தில்

அடுத்த பதினைந்து நாட்கள் இன்கம்மிங் கால்களை மட்டுமே பெற இயலும்.

16வது நாள் இன்கம்மிங் கால்களும் துண்டிக்கப்படும்.

மீண்டும் சேவையை பெற அடுத்த 90 நாட்களுக்குள் ரீசார்ஜ் செய்யவேண்டும்.

இவ்வாறு செய்யாதபட்சத்தில் 90 நாட்களுக்கு பின் உங்கள் மொபைல் எண் முற்றிலும் சேவைநீக்கம் செய்யப்படும்.


முதல் வோடபோன் 

ஐடியா,ஏர்டெல் நிறுவனங்களும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஜியோவின் அதிரடி இலவசங்கள் பின் மக்கள் ஓடியபோதே 

இதற்கும் சேர்த்து பின்னாளில் நாம் பணத்தை இழக்க வேண்டும் என்று நாங்கள் அன்றே கூறியது இன்று நடைமுறைக்கு வருகிறது.

இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது, அடிமட்ட தொழிலாளர்கள்,வயதான பெரியவர்கள் போன்ற வெறும் இன்கம்மிங் கால்களை மட்டுமே பெரும் நபர்கள்தான்.

55 நாட்கள் இடைவெளிக்கு பின் சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்

சபரிமலை புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.

உணவு, தண்ணீர் பிரச்னை உள்ளதால், தரிசனம் முடிந்ததும் ஊர் திரும்பிவிடுமாறு பக்தர்களுக்கு தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.


Image result for சபரிமலை55 நாட்கள் இடைவெளிக்கு பின் சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார், தொடர்ந்து ஆழிகுண்டத்தில் தீ வளர்க்கப்படும்.


இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும், நாளை அதிகாலை 4.00 மணிக்கு நெய் அபிஷேகம் துவங்கும்.


21-ம் தேதி இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும்.


தினமும் படிபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும், தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகளை நடத்துவார்.

கிழிந்த 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற நிபந்தனை

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்க, மத்திய அரசு பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டு செல்லாது என கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி அறிவித்தது. மேலும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2,000, ரூ.200 நோட்டுகள் கிழிந்து விட்டால் மாற்ற இயலாது எனவும் அறிவித்திருந்தது.

இதையடுத்து இது குறித்து புதிய முடிவுகளை ரிசர்வ் வங்கி தற்போது அறிவித்துள்ளது. அதன்படி 109.56 சதுரசெ.மீ கொண்ட 2000 ரூபாய் நோட்டின் அளவில், 88 சதுரசெ.மீ வரை கிழிந்திருந்தால் அதற்கு முழு பணமும், 44 சதுரசெ.மீ வரை சேதமடைந்திருந்தால், பாதி பணம் மட்டுமே வங்கியால் அளிக்கப்படும்.
அதற்கு அதிகமாகக் கிழிந்திருந்தால் பணம் வாங்கப்பட மாட்டாது. அதேபோல் தான் 200 ரூபாய் நோட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எச். ராஜாவுக்கு எதிராக அணி திரள்கிறார்கள் வழக்கறிஞர்கள்!

 
காவல்துறையினர், டிஜிபி, சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றை நடுத் தெருவில் நின்று படு அசிங்கமாக விமர்சித்துப் பேசிய எச். ராஜாவுக்கு எதிராக வழக்கறிஞர்கள் அணி திரள்கின்றனர். காவல்துறையினரையும், டிஜிபியையும் படு மோசமாக விமர்சித்து எச். ராஜா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதை விட மோசமாக உயர்நீதிமன்றத்தைப் பார்த்து சொல்லக் கூடாத, தகாத வார்த்தையால் விமரா்சித்துள்ளார் எச். ராஜா. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழக வரலாற்றில் இதுவரை யாருமே இப்படி நடுத் தெருவில் நின்று கொண்டு உயர்நீதிமன்றத்தை விமர்சித்ததில்லை. இதனால் சட்டத் துறையினரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்


இதையடுத்து எச். ராஜா விவகாரத்தை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் முறையிட வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். 


நாளை பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதியை சந்தித்து முறையிடவுள்ளனர். அவரிடம் எச். ராஜா மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தவுள்ளனர்.

அதேபோல தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரிடமும் ஒரு மனு தரவுள்ளனர். அதில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குத் தொடர கோரிக்கை விடுக்கவுள்ளனர்.

Image result for H RAJAஇதுகுறித்து மூத்த வழக்கறிஞர் இளங்கோ கூறுகையில் எச். ராஜா மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்துள்ளார். தான் பேசவில்லை என்று அவர் கூறியிருப்பது பொய். அவர்தான் பேசியிருக்கிறார் என்பதை வீடியோவில் பார்த்தாலே தெரிகிறது. எந்த தடயவியல் சோதனைக்கு அதை அனுப்பினாலும் அது உண்மை என்று வரும். எனவே அவர் மீது பொய் பேசியமைக்காகவும் தனியாக வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்றார்.
#தானாகமுன்வந்துவழக்கு? 

இதற்கிடையே, எச். ராஜா மீது சென்னை உயர்நீதிமன்றமே தானாக முன்வந்து (சுவோமோட்டோ) வழக்கு தொடருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


எப்படி இருந்தாலும் எச். ராஜாவை சும்மா விடக் கூடாது. மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் இதுபோல அடாவடியாக செயல்படுவோரிடையே ஒரு பயம் வரும் என்ற எண்ணம் பொதுமக்களிடையே நிலவுகிறது.

அறிமுகமானது சியோமி Poco F1; ஆகஸ்ட் 29 முதல் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை

 
சியோமியின் துணை நிறுவனமான போக்கோவின் முதல் திறன்பேசியான போக்கோ F1 இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. சியோமியின் தயாரிப்பு மேலாளரான ஜெய் மணி இன்று டெல்லியில் இதை அறிமுகப்படுத்தினார். மூன்று வகையான F1 போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

இவற்றில் அதிகபட்சமாக 8ஜிபி ரேமும் 256 ஜிபி இன்டர்னல் மெமரியும் உள்ளது. லிக்விட் கூல் தொழில்நுட்பத்துடன் கூடிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 SoC, 6.18 இன்ச் முழு எச்.டி டிஸ்ப்ளே, ஆகியவை இதன் பிற சிறப்பம்சங்கள். இதனை ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே ஆர்டர் செய்ய முடியும். ஆச்சரியமாக இப்போனின் விலை முப்பதாயிரத்துக்குக்கும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Xiaomi Poco F1 விலை:சியோமி போக்கோ F1இன் விலை இந்தியாவில் 20,999 ரூபாயில் இருந்து (6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி) தொடங்குகிறது. 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரியுடனான போனின் விலை 23,999 ரூபாய். 8ஜிபி ரேம்/256ஜிபி மெமரியுடனான போனின் விலை 28,999 ரூபாய். பாலிகார்பனேட்டாலான பின்பக்க கேசுடன் rosso red, steel blue & graphite black ஆகிய மூன்று நிறங்களில் இப்போன்கள் கிடைக்கின்றன. மேலும் ‘armoured edition’ என்ற பெயரில் கெவ்லார் இழையுடனான சிறப்புப் பதிப்பு ஒன்று 29,999 ரூபாய்க்குக் கிடைக்கிறது.

 ஆகஸ்ட் 29 பிற்பகல் 12 மணி முதல் ஃப்ளிப்கார்ட், MI.com தளங்களில் இப்போனை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். எச்டிஎப்சி க்ரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் ஆர்டர் செய்வோர்க்கு 1000ரூபாய் உடனடி கழிவு கிடைக்கும். மேலும் ஆறு டிபி டேட்டா, 8000ரூபாய் மதிப்பிலான இதர சலுகைகளுடன் கூடிய ஜியோவின் அறிமுக ஆஃபரும் உள்ளது. போனின் பெட்டியிலேயே ஒரு soft case தரப்படுகிறது. இதுபோக 399ரூபாய்க்கு hard caseஉம் கிடைக்கும். 

கெவ்லார் இழையாலான armoured case 799ரூபாய்க்குக் கிடைக்கும். வேறு வகையான சிலிக்கான் கேஸ்களும் 299ரூபாய்க்குக் கிடைக்கும். புதிய துணை நிறுவனம் என்றாலும் சியோமியின் சேவை மையங்களிலேயே போக்கோ போன்களை சர்வீஸ் செய்துகொள்ளலாம்.போக்கோ F1 திறன் குறிப்பீட்டு விவரங்கள்:டூயல் நானோ சிம் (ஹைப்ரிட்), ஆண்டுராய்டு 8.1 ஓரியோ தொழில்நுட்பத்தை அடிப்படியாகக் கொண்ட MIUI 9.6 இடைமுகம், 6.18 இன்ச் முழு எச்.டி டிஸ்ப்ளே, 2.D கொரில்லா கிளாஸ் 3, குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 SoC ஆகியவற்றைக் கொண்டுள்ளது . 

ஆண்டிராய்டு அப்டேட்டும் விரைவில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,000mAh பேட்டரியுடன், டூயல் கேமரா, 12 மெகா-பிக்சல் ப்ரைமரி, 5 மெகா-பிக்சல் செகண்டரி கேமரா உள்ளன. வழக்கமான MIUI இடைமுகத்தை மாற்றி ஆண்டிராய்டு இடைமுகத்தை ஒத்ததாக போக்கோ லான்ச்சர் உள்ளது. நோட்டிபிகேசன்களின் தோற்றமும் சிறிது மாறுதலோடு விரைவான இடைமுகத்தைக் கொண்டிருக்கும்.அகச்சிவப்புக் கதிர்களால் செயல்படும் ஃபேஸ் அன்லாக், செயற்கை நுண்ணறி அழகூட்டு தொழில்நுட்பம் ஆகியவையும் உள்ளன. 

கேமராவின் செயற்கை நுண்ணறி தொழில்நுட்பம் இந்தியாவுக்கென்றே வடிவமைக்கப்பட்டுள்ளது.64ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி என மூன்று வகை மெமரி ஆப்சன்களோடு இப்போன் கிடைக்கிறது. தனியாக மெமரி கார்டு மூலம் 256 ஜிபி வரை கூடுதலாக நீட்டித்துக்கொள்ளவும் முடியும். 4G+, VoLTE, Wi-Fi 802.11ac, ப்ளூடூத், v5.0, USB Type-C, 3.5மிமீ ஆடியோ ஜாக், accelerometer, ambient light sensor, digital compass, gyroscope, and proximity sensor ஆகிய சென்சார்கள் என கனக்டிவிட்டி ஆப்சன்கள் நீள்கின்றன. 18W சார்ஜிங் சப்போர்ட், குவிக் சார்ஜ் 3 ஆகியவற்றுடன் கூடிய 4000mAh பேட்டரியும் இதன் முக்கிய சிறப்பம்சங்களுள் ஒன்று.


Poco F1 smartphone was launched in August 2018. The phone comes with a 6.18-inch touchscreen display with a resolution of 1080 pixels by 2246 pixels.

The Poco F1 is powered by 2.8GHz octa-core processor and it comes with 6GB of RAM. The phone packs 64GB of internal storage that can be expanded up to 256GB via a microSD card. As far as the cameras are concerned, the Poco F1 packs a 12-megapixel (f/1.9, 1.4-micron) + 5-megapixel (f/2.0, 1.12-micron) primary camera on the rear and a 20-megapixel front shooter for selfies.

The Poco F1 is powered by a 4000mAh. It measures 155.50 x 75.20 x 8.80 (height x width x thickness) and weighs 182.00 grams.

The Poco F1 is a dual SIM (GSM and GSM) smartphone that accepts Micro-SIM and Nano-SIM. Connectivity options include Wi-Fi, GPS, Bluetooth, Infrared, USB Type-C, FM, 3G and 4G (with support for Band 40 used by some LTE networks in India). Sensors on the phone include Face unlock, Fingerprint sensor, Proximity sensor, Accelerometer and Ambient light sensor.
About Xiaomi

Xiaomi is a privately owned company that designs, develops, and sells smartphones, an Android-based OS, and other consumer electronics. Xiaomi also makes fitness trackers, TVs, air purifiers, and tablets. It has a skin for its Android phones and tablets – MIUI. The company largely sells its phones via flash sales in India.